முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த செல்போனை பயன்படுத்துகிறேனா? நாளிதழில் வந்த செய்திக்கு டிரம்ப் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : டிரம்ப் தனது தனிப்பட்ட சொந்த செல்போனைத்தான் பயன்படுத்துகிறார் என கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தனிப்பட்ட செல்போனை பயன்படுத்துகிறார் என சி.என்.என். செய்தி வெளியிட்டது. அந்த செய்தியில், டிரம்பின் ரகசிய உரையாடல்களை வெளிநாட்டு உளவு அமைப்புகள் இடைமறித்து கேட்கவும், குறுந்தகவல்களை மடக்கவும் வாய்ப்பு இருந்தாலும்கூட, டிரம்ப் தனது சொந்த செல்போனைத்தான் பயன்படுத்துகிறார் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், மீண்டும் மீண்டும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்தும்கூட நான் எனது சொந்த செல்போனை பயன்படுத்தித்தான் பேசுகிறேன் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. சி.என்.என். வெளியிட்டது முற்றிலும் தவறான தகவல். நான் பல ஆண்டுகளாக சொந்த செல்போனை பயன்படுத்துவதில்லை. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, வழங்கப்பட்ட செல்போனைத்தான் பயன்படுத்தி வருகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து