முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி யார் தப்பு செய்தாலும் என்கவுண்டர் தான்: தெலுங்கானா அமைச்சர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்தை நியாயப்படுத்தி பேசியுள்ள அம்மாநில மூத்த அமைச்சர் ஒருவர் இனி யார் தப்பு செய்தாலும் என்கவுண்ட்டர் தான் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநில கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளூர் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில்,

இது ஒரு பாடம். இனி நீங்கள் யாரேனும் தவறு செய்தால். நீதிமன்ற விசாரணையால் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்க முடியாது. சிறை செல்லவும் பின் ஜாமினில் வெளியில் வந்து வழக்கை இழுத்தடிக்கவும் முடியாது. அது போன்று இனி எதுவும் நடக்காது. இந்த என்கவுன்ட்டர் மூலம் கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் என்கவுன்ட்டர்தான் என்ற எச்சரிக்கை கருத்தை நாங்கள் அனுப்பியுள்ளோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தெலுங்கானா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இது. வெறும் நலத்திட்டங்கள் மூலம் மட்டும் நாங்கள் முன்மாதிரியாக நிற்கவில்லை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஏற்படுத்தியுள்ள இத்தகைய நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாக இருக்கிறோம் என்று  கூறினார். முன்னதாக மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சரும் என்கவுன்ட்டரை ஆதரித்துப் பேசியிருந்தார். இனி பெண்கள் மீது மோசமான பார்வையைக் கடத்துபவர்களின் கண்கள் பிடுங்கி எரியப்படும் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு பலரும் பாராட்டும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து