ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பி.இ. படித்தவர்கள் இனி கணித ஆசிரியராகலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      தமிழகம்
tn government 2019 06 22

சென்னை : பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பள்ளிப்படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். பட்டப்படிப்பை முடித்த அனேக பொறியாளர்கள் வேறு துறைகளில் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பி.இ. படிப்பில் எந்த பிரிவை எடுத்திருந்தாலும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம்  என்று கூறப்பட்டுள்ளது. சமநிலை அந்தஸ்து வழங்கப்படாததால் பி.இ. படித்தவர்கள் டெட் தகுதி தேர்வு எழுத இயலாத நிலை இருந்த சூழ்நிலையில் தற்போது இந்த புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாணையின்படி பி.இ. படித்தவரும் இனி டெட் தேர்வு எழுதி 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியாற்றலாம். 2015-2016 கல்வி ஆண்டில் பி.இ. படித்தவர்களும் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது. ஆனால் அந்த வகையில் பி.எட். படிப்பில் சேர கூடிய மாணவர்கள் டெட் தேர்வு எழுத தகுதி உடையவர் அல்ல என்று கூறப்பட்டது. தொடர்ந்து சமநிலை அந்தஸ்து வழங்கப்படாததால் பி.இ. படித்தவர்கள் டெட் தகுதி தேர்வு எழுத இயலாத நிலை இருந்தது. இதற்கு முன்பு பி.எட் கல்லூரிகளில் 20 சதவிகித இடங்கள் பொறியியல் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் அதிகம் சேராததால் அது 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பி.எட் படிப்பை படித்தாலும் அதற்கு பிறகு டெட் தேர்வை எழுதி அவர்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக முடியாத சூழல் இருந்தது. அதற்கு தீர்வாக தற்போது ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம். அதற்கு அவர்கள் தகுதி பெறுகின்றார்கள் என்ற அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமநிலை அந்தஸ்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழு முடிவெடுத்ததன் அடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து