141-வது பிறந்த நாள்: மூதறிஞர் ராஜாஜியின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      தமிழகம்
ministers floral tribute rajaji 2019 12 10

சென்னை : மூதறிஞர் இராஜாஜியின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, பாரிமுனை ஐகோர்ட் வளாகத்தின் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மூதறிஞர் இராஜாஜியின் பிறந்த தினமான டிசம்பர் 10-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, மூதறிஞர் இராஜாஜியின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, பாரிமுனை ஐகோர்ட் வளாகத்தின் அருகே அமைந்துள்ள மூதறிஞர் இராஜாஜியின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. பென்ஜமின், க. பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், கூடுதல் இயக்குநர்கள் உல. இரவீந்திரன்(மக்கள் தொடர்பு), கி. சாந்தி(செய்தி), இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து