முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருமங்கலம் ஸ்ரீயோகஜோதி யோகா மையத்தில் உடலில் தீபமேற்றியபடி ஆசனமிட்டு மாணவ,மாணவிகள் அசத்தல்:

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- கார்த்திகை தீபத்திருநாளை  முன்னிட்டு திருமங்கலம் ஸ்ரீயோகஜோதி யோகா மற்றும் ஆய்வு மையத்தில் உடலில் தீபமேற்றியபடி மாணவ,மாணவியர் ஆசனமிட்டு அசத்திய நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக யோகா பேராசிரியர் எஸ்.இ.குருநாதன் என்பவரால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீயோகஜோதி யோகா மற்றும் ஆய்வு மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு உடலில் தீபமேற்றி மாணவ,மாணவிகள் ஆசனமிடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு உடலில் தீபமேற்றி சிறப்பு ஆசனங்களிடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.அப்போது யோகா பேராசிரியர் எஸ்.இ.குருநாதன் மற்றும் பயிற்சியாளர் தர்மேஸ்வரி முன்னிலையில் ஸ்ரீயோகஜோதி யோகா மற்றும் ஆய்வு மையத்தில் பயின்று வரும் மாணவ,மாணவிகள் தங்களது உடல் முழுவதிலும் தீபங்களை ஏற்றிபடி பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினார்கள்.குறிப்பாக மாணவி அமிர்தா என்பவர் உடல் முழுவதிலும் தீபங்களை ஏந்திக் கொண்டு சமகோனா ஆசனமும்,சிறுவன் முத்துசிவா உடலில் தீபமேற்றி சுகபத்மாசனா என்ற ஆசனம் செய்து காட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு யோகஜோதி யோகா மைய மாணவ,மாணவிகள் உடலில் தீபமேற்றி செய்து காட்டிய ஆசனங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இற்கான ஏற்பாடுகளை யோகா பேராசிரியர் எஸ்.இ.குருநாதன் தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து