நித்யானந்தா போல் தீவு வாங்கி ஸ்டாலின் அங்கு முதல்வராகலாம் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      தமிழகம்
jayakumar 2019 12 08

சென்னை : நித்யானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆகலாம் என்றும் தமிழகத்தில் என்றைக்கும் அவர் முதல்வராக முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ராஜாஜியின் சிலைக்கு மாலை அணிவித்த பின்அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-–

குடியுரிமை சட்டத்தால் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு இல்லை. எதிர்க்க வேண்டிய வி‌ஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய வி‌ஷயங்களை அ.தி.மு.க. ஆதரித்து வருகிறது. இச்சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் கூறியிருக்கிறார். எதையும் ஆராயாமல் அ.தி.மு.க. முடிவு எடுக்காது. தி.மு.க. ஒரு குழப்பமான கட்சி. நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்த முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதனை ஏற்பதாக கூறிய ஸ்டாலின், தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலை வரவேற்பதாக கூறி விட்டு அதே நேரத்தில் நீதிமன்றம் சென்று மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் செய்து வருகிறார். முதல்வர் கனவோடுதான் ஸ்டாலின் உள்ளார். அவர் நித்யானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் முதல்வராக ஆகலாம். தமிழகத்தில் ஒரு போதும் அவரால் முதல்வராக முடியாது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாகத் தான் அ.தி.மு.க. பின்பற்றி வருகிறது. தோல்வி பயம் காரணமாக ஏதேனும் செய்து தேர்தலை நிறுத்த முடியுமா என்று பார்த்து வருகின்றனர். தி.மு.க. கரை சேராத கப்பல். 2021 தேர்தலில் தோல்வி அடையும் என்று தெரிந்ததால் தான் இதுபோன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தான் தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து