இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      இந்தியா
Yeddyurappa 2019 11 04

பெங்களூரு : தகுதி நீக்கம் செய்யப்பட்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் 117-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதில் 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களாக்க முடிவு செய்துள்ளோம். இரண்டொரு நாளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலமே நாங்கள் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அந்த நன்றியை மறக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து