முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.28,872-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் விலையில் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே நீடித்து வந்தது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.96 அதிகரித்து ரூ.28,872-க்கு விற்பனையானது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து, ரூ.3,771க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 46.60 ரூபாயிலிருந்து 47 ரூபாயாக அதிகரித்து இருந்தது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி 46,600 ரூபாயிலிருந்து 400 ரூபாய் உயர்ந்து 47,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து