முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு ஏராளமானோர் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல்:

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்  திருமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு நேற்று ஏராளமானோர் ஆர்வமுடன் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட கவுன்சில்,திருமங்கலம் ஒன்றியம்,கள்ளிக்குடி ஒன்றியம் மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30-ம் தேதி உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி தற்போது மேற்கண்ட அனைத்து ஒன்றியங்களிலும் வேட்புமனுத்தாக்கல் செய்திடும் நிகழ்வுகள் களைகட்டி வருகிறது.இதன் ஒருபகுதியாக திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏராளமானோர் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து தங்களது வேட்புமனுக்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியிலிருந்த தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர்.அதில் பன்னிக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர்(பெண்) பதவிக்கு கே.சிவமணிகொடிவைரன்,சுவிதா ஆகியோரும்,வடகரை ஊராட்சிக்கு மணி என்பவரும்,உச்சப்பட்டி ஊராட்சியில் உ.தமிழரசி உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது வேட்பு மனுக்களை அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர்.
குறிப்பாக அமாவாசை நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்திட ராசியான நாள் என்று கருதிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை நல்லநேரம் பார்த்து தாக்கல் செய்தனர்.இதனால் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதி முழுவதிலும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களின் ஆதரவாளர்கள் கூட்டத்தினால் நிறைந்து காணப்பட்டது.இதையடுத்து திருமங்கலம் டி.எஸ்.பி உத்தரவின் பேரில் 20க்கும் மேற்பட்ட போலீசார் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து