ரஜினுக்கு முக.ஸ்டாலின், கமல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      தமிழகம்
Stalin-Rajini-Kamal 2019 12 12

சென்னை : 70-வது பிறந்த நாளை கொண்டாடிய  நடிகர் ரஜினிகாந்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   

நடிகர் ரஜினிகாந்த் நேற்று  70வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் .

தி.மு.க தலைவர் முக. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.   

நல்ல உடல் மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அன்பர் நண்பர் ரஜினிகாந்தின் நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்’ என்று கூறியுள்ளார்.இதே போல் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து