ராகுலுக்கு அவையில் இருக்க தகுதியில்லை - ராஜ்நாத் சிங் காட்டம்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      இந்தியா
rajnath singh 2019 09 29

புது டெல்லி : மேக் இன் இந்தியா திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அவையில் இருக்க தகுதியில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆனால், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது சாதாரண கருத்துதான். இதற்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் கோட்டா நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்,  நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கே தினமும் ரேப் இன் இந்தியா நடைபெறுகிறது. பெண்களைப் படிக்க வைப்போம்; பாதுகாப்போம் என்று மோடி அறைகூவல் விடுத்தார். ஆனால் யாரிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறவில்லை என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்று பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சு பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. ராகுல் காந்தியின் கருத்து குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,

ராகுல் காந்தியின் பேச்சு மக்களவையை மட்டும் வேதனைப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் வருத்தப்பட வைத்துள்ளது. இதுபோன்ற உறுப்பினர் இந்த அவையில் இருப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. ராகுல் காந்தி தனது கருத்துக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். மேக் இன் இந்தியா என்பது, இறக்குமதி அதிகமாக இருக்கும். இந்தியாவில், ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்று கொண்டுவந்தார். இதன் மூலம் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற நல்ல நோக்கில் அறிமுகம் செய்தார். ஆனால், இப்போது சிலர் மேக் இன் இந்தியா என்ற கருத்தையே மோசமாகச் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். அதே சமயம் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நிருபர்களிடம் கூறுகையில், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி சாதாரணமாகப் பேசியுள்ளார். இதில் மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து