குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      உலகம்
imran khan 2019 09 28

இஸ்லாமாபாத் : இந்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மோடி தலைமையின்கீழ் இந்தியா, இந்து மேலாதிக்க செயல்திட்டத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது” என கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில், “இந்த செயல் திட்டமானது, பாகிஸ்தான் மீதான அணு ஆயுத மிரட்டல்களுடன் சேர்ந்து, மிகப்பெரிய ரத்த களரிக்கு வழிநடத்தும். உலகுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். காலம் கடந்து செல்வதற்கு முன் உலகம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து