கங்கை நதி மேலாண்மை: பிரதமர் மோடி தலைமையில் முதல் கூட்டம்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      இந்தியா
pm modi meet gangai river 2019 12 14

கங்கை நதி மேலாண்மை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். ன்னர் சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பின்னர் அங்கு பிரதமர் மோடி தலைமையில் கங்கை நதி மேலாண்மை தொடர்பான முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து