ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ம் தேதி புதுவை வருகை

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      இந்தியா
ramnath govind 2019 08 05

புதுச்சேரி : வருகிற 23-ம் தேதி நடைபெறும் புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

புதுவை மத்திய பல்கலைக் கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பல்கலைக் கழக 27-வது பட்டமளிப்பு விழா வருகிற 23-ம் தேதி (திங்கட்கிழமை) பல்கலைக்கழக ஜவகர்லால் நேரு கலையரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், புதுவை மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மித்சிங் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து