கங்குலி பாணியில் முக்கிய மாற்றங்களை செய்யும் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      விளையாட்டு
smith 2019 12 14

மும்பை : பி.சி.சி.ஐ.யின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டதையடுத்து அணித்தேர்வு குறித்து ரவிசாஸ்திரி, விராட் கோலியிடம் பேசப் போவதாக கங்குலி தெரிவித்திருந்தார், அவரது பாணியிலேயே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் இயக்குநராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சிலபல முக்கிய மாற்றங்களை முன்னெடுத்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று தென் ஆப்பிரிக்க அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் அறிவிக்கப்படவுள்ளார். இதைவிடவும் முக்கியமான முன்னெடுப்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலீஸை நியமிக்கும் நடைமுறைகளையும் முன்னெடுத்து வருகிறார். அதே போல் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களையும் தென் ஆப்பிரிக்க ஏ அணியில் பயிற்சிப்பொறுப்பில் நியமிக்கவும் ஸ்மித் முடிவெடுத்து அதனடிப்படையில் ஆஷ்வெல் பிரின்ஸ் தென் ஆப்பிரிக்க ஏ அணி விவகாரங்களையும் கவனிப்பார். அதே போல் இம்மாதம் 26-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது, அதற்கான அணியிலும் சிலபல புதுமைகளை ஸ்மித் புகுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலப் பதவிதான் என்றாலும் வீழ்ந்து கிடக்கும் தென் ஆப்பிரிக்க அணியையும் அதன் கறைபடிந்த வாரியத்தையும் மீண்டும் நல்ல வழியில் திரும்புவதற்கு கிரேம் ஸ்மித் வழிவகுப்பார் என்று அங்கு அவர் மீது அபார நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து