முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

சீனாவுடனான வர்த்தக போரை நிறுத்தி வைத்து நேற்று (ஞாயிற்றுக் கிழமை) அமலாக இருந்த 15 சதவீத வரிவிதிப்பை ரத்து செய்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம்சாட்டி, இரு தரப்பு வர்த்தக போரை தொடங்கினார். அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். ஆனால் சீன அதிபர் ஜின்பிங், டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார். அது மட்டுமின்றி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கிற வகையில், சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தார். இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தி வந்தன. இந்த வர்த்தக போர், உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையொட்டி இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முதல் கட்ட ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று (15-ந் தேதி) அமலுக்கு வரவிருந்த சீன பொருட்கள் மீதான 15 சதவீத அமெரிக்க வரி விதிப்பு ரத்தாகி உள்ளது. இரண்டாம் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தையை, அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிகிற வகையில் காத்திருக்காமல் உடனடியாக தொடங்குவோம் என டிரம்ப் அறிவித்துள்ளார். தற்போது முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கு அமெரிக்க விவசாயிகளும், சில்லரை வியாபாரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நடவடிக்கையில் திருப்தி அடைந்துள்ள சீனா, அமெரிக்காவில் இருந்து கூடுதல் அளவு சோயாபீன், பால் பொருட்கள், பிற விவசாய பொருட்களை வாங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பண்ணை பணியக கூட்டமைப்பின் தலைவர் ஜிப்பி டுவால் கூறும் போது, இரு தரப்பு மோதல் ஏற்படுவதற்கு முன்பாக சீனாதான் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய விவசாய சந்தையாக இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு சரிந்து விட்டது. இப்போது மீண்டும் சீன வர்த்தகத்துக்கான கதவை திறந்திருப்பதால் பழைய நிலைக்கு திரும்ப வழி வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து