முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம், கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையம் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் ஒழுங்குமுறை  விற்பனை கூட வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
 தேனி மாவட்டம், கம்பத்தில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்பேரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கம்பம் மெட்டு சாலையில் உள்ள மண்ணெண்ணெணய் விற்பனை நிலைய வளாகத்தில் நெல்கொள்முதல் நிலையம்  திறக்கப்பட்டது. ஆனால் இந்த கொள்முதல் நிலையம் விவசாய நிலங்களிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் விவசாயிகளுக்கு நெல்லுக்கான விலை அதிகம் கிடைத்தும் செலவும் அதிகமானது. இதனால் விவசாயிகளின் கோரிக்கையின் படி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அருகில் அமைக்க வாணிபக் கழக அதிகாரிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் கம்பம் புதுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தேனி மண்டல மேலாளர் சீதாராமன் திறந்து வைத்தார். கண்காணிப்பாளர் பொன்ராம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து