கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்ற பாடுபடும்; அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு

17 dgl  photo

திண்டுக்கல், -கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும்; அ.தி.மு.க. அரசு நிறைவேற்ற பாடுபடும்; என்று கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் திருவருட்பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகித்து குழந்தை இயேசு சொருபத்தை மந்திரித்து கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார். திருவருட் பேரவை செயலாளர் ஸ்டீபன் மார்டின் வரவேற்றார். தலைவர் எஸ்கே.சீஸ் குப்புசாமி, நாட்டாண்மை காஜா மைதீன் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வாழ்த்துரை வழங்கி பேசுகையில், திண்டுக்கல்லில் புதிதாக கல்லறை அமைப்பதற்காக இடமும். அரசு கேபிளில் மாதா டி.வி. சேனலும் ஒளிபரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்ற பாடுபடும்; என்றார்.
விழாவில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், வேடசந்து(ர் எம்.எல்ஏ. டாக்டர் பரமசிவம், அரசியல் கட்சியினர். மும்மதத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்;. நிகழ்ச்சியை திருவருட் பேரவை இணை செயலாளர் திபூர்சியஸ் தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் ரத்தினம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து