முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவராக நடிக்க இருக்கும் ஹர்பஜன்சிங்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : பிளாக் ஷீப் குழுவினர் தயாரிக்கும் வலைத் தொடரில் ஐ.டி. ஊழியர்களுக்கு திருக்குறள் சொல்லும் திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார்.

தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூ.டியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். பிளாக் ஷீப் குழு புதிதாக 6 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்க விழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

அறிவிப்புகளில் ஒன்று, சி.எஸ்.கே. அணியில் சுழர்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை டியூடு விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 10 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போதுள்ள இளைய தலைமுறைகள், குறிப்பாக ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை திருக்குறள் வாயிலாக ஹர்பஜன் சிங், அவரது ஸ்டைலில் சொல்ல இருக்கிறார்.

இந்த வலைத் தொடருக்கு திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதுபோல், ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து