ராமநாதபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் தலைமையில் ஆய்வு

18 ELECTION OBSERVER MEETING- y

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் மற்றும் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ராமநாதபுரம்; மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 3691 பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.  அதன்படி, 09.12.2019 அன்று முதல் 16.12.2019 வரையில் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவு 27.12.2019 மற்றும் 30.12.2019 என 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.  தேர்தல் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 1819 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டடுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அலுவலர்கள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக சக்கர நாற்காலி, சாய்வுதள வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களித்திட ஏதுவாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்திட வேண்டும். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை வீடியோகிராபி, இணையதள கண்காணிப்பு நுன் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் ஆகிய முறையில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை நிரைவேற்றிட வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் காலதாமதமின்றி தங்களது பணிகளை மேற்கொள்வதுடன், அது குறித்த நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு  உடனுக்குடன் தெரியப்படுத்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்திட ஒத்துழைப்பு நழ்கிட வேண்டும் என ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார். மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தகவல்களை தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்திடம்  9150131122 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்திடலாம்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.வருண்குமார், கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோ.குருநாதன், ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் காவல் கண்கானிப்பாளர் எம்.தங்கவேலு, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (உள்ளாட்சி தேர்தல்) ஆ.கணேசன், (வளர்ச்சி) ரகுவீரகணபதி, (பொது) ஜி.கோபு உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து