ஸ்ரீவி கலசலிங்கம் பல்கலையில் “அனைத்து துறையிலும் நிலையான வளர்ச்சி” என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச மாநாடு

19 kalasaligam

  விருதுநகர்-  ஸ்ரீவி கலசலிங்கம் பல்கலையில் “அனைத்து துறையிலும் நிலையான வளர்ச்சி” என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச மாநாடு துவக்கவிழா பல்கலை துணைத்தலைவர் முனைவர். எஸ். சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் தம் தலைமையுரையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா, கொரியா ஆராய்ச்சியாளர்கள் 800க்கு மேற்ப்பட்டவர்கள் 1600 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து, அதற்குரிய தொழில் நுட்பத்துறை அரங்குகளில் மூன்று நாட்களில் பங்கேற்று உரையாற்றுவார்கள் என்று கூறினார்.
சிங்கப்பூர் நேஷனல் யூனிவர்சிட்டி துணை இயக்குநர் லியாங் ஸ{-யுய் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.
கலசலிங்கம் பல்கலையின் துணைவேந்தர் முனைவர் ஆர். நாகராஜ் முன்னிலை வகித்தார்.
பல்கலை பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் லியாங் ஸ{-யுய் பேசுகையில் அனைத்து துறையிலும் நிலையான வளர்ச்சி அடைய கல்வி, இயற்கை சக்தி, சுத்தமான குடிநீர், உயர்தர மருத்துவம், இயற்கை பேரிடர் முன்னாய்வு போன்ற 17 குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் முன்வர வேண்டும். மேலும் இது போன்ற ஆராய்ச்சிகள் மக்களை சென்றடைந்து தாக்கத்தை தர வேண்டும். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, கலிபோர்னியா, தைபான், கொரியா ஆகிய நாடுகளில் குடிநீர் பிரச்சினையும், காற்று மாசுப்படுதலும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. சிங்கப்பூரில் குறிப்பாக குடி தண்ணீர் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு உள்ளது. எனவே கழிவுநீர்களை சுத்த நீராக மாற்றி “புதிய தண்ணீர்” என்ற பெயரில் விநியோகம் செய்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் காற்று மாசு கட்டுப்பாட்டிற்கு 85மூ வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்து வீட்டில் உள்ள மக்கள் சுத்த காற்று சூழ்நிலையில்  வாழ்க்கின்றனர் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
சிங்கப்பூர் நேஷனல் யூனிவர்சிட்டி பேராசிரியர் என். சுந்தர்ராஜன், கொல்கட்டா அலிபூர் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெய்தீப் சாராங்கி, ரூர்கி, ஐஐடி பேராசிரியர் ஜஸ்டின் தாமஸ், ஐகார் விஞ்ஞானி எஸ். செந்தில் விநாயகம், தாய்லாந்து பேராசிரியர் பீர் வாட் நுந்தா வாரா, பெங்களுர் அறிவியல் தொழில் நுட்பக் கழகம் பேராசிரியர் சுரேஷ் சுந்தரம், லாஜிஸ்டிக் ஸ்கில் கவுன்சில் அதிகாரிகள் இராமானுஜம், கணேசன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
பல்கலை துணைத்தலைவர் “ஆராய்ச்சிக் கட்டுரை மலர்” மற்றும் “ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய குறுந்தகடு” வெளியிட மற்ற ஆராய்ச்சியாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
இயந்திரவியல் துறைத்தலைவர் எஸ் ராஜேஷ் நன்றி வழங்கினார்.
சர்வதேச மாநாட்டு ஜெனரல் சேர் மற்றும் பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன் தலைமையில் அனைத்து துறை பேராசிரியர்கள் இணைந்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தியா உள்பட 1500 விஞ்;ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து