முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனாவுக்கு இந்திய அரசியல் பற்றி தெரியாது மகளின் வலைதள பதிவு குறித்து கங்குலி விளக்கம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை, : குடியுரிமை திருத்தத் சட்டத்துக்கு எதிரான சனா கங்குலியின் இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து தனது மகளுக்கு இந்திய அரசியலை பற்றி ஏதும் தெரியாது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பி.சி.சி.ஐ. தலைவருமான கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் ஒப்புதலில் சட்டமாக மாறியது. இந்த நிலையில் குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பி.சி.சி.ஐ.யின் தலைவருமான கங்குலியின் மகள் சனா கங்குலி பிரபல இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின், ’தி எண்ட் ஆப் இந்தியா’ என்ற புத்தகத்தில் குறிப்பபிடப்பட்டுள்ள சில வரிகள் அடங்கிய பக்கத்தை பதிவிட்டு குடியிரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தனது நிலைப்பாட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் சனா கங்குலியின் பதிவுக்கு விளக்கம் அளித்தார். இதுகுறித்து கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த விவகாரத்திலிருந்து சனாவை விட்டு விடுங்கள். இந்த பதிவு உண்மை இல்லை. அவள் இளம் பெண். அரசியலை பற்றி சனாவுக்கு எதுவும் தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளார். கங்குலி விளக்கம் அளித்துள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அப்பதிவை சனா கங்குலி நீக்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து