முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் ஏலம்: கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில்  நடந்தது.

ஐ.பி.எல் ஏலப் பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 332 பேர் இடம் பெற்றனர். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அணிகளிடம் உள்ள தொகையை பார்க்கும் போது, டெல்லி கேப்பிடல்ஸ் வசம் ரூ.27.85 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடியும்,  கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியிடம் ரூ.35.65 கோடியும், மும்பை  இந்தியன்ஸ் அணியிடம் ரூ.13.05 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.28.90 கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் அணியிடம் ரூ.27.90  கோடியும் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வசம் ரூ.17 கோடியும்  இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இயான் மோர்கனை கொல்கத்தா அணி ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.  பேட் கம்மின்ஸ்-ஐ 15.50 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி கிறிஸ் லைன்-ஐ இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணி ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது

பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ்:

ஆரோன் பிஞ்ச்சை ரூ4.4 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
கிறிஸ் மோரிஸ்-ஐ ரூ.10 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.

டெல்லி கேப்பிடல்ஸ்:

இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ்-ஐ 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. ஜேசன் ராயை டெல்லி அணி 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சாம் கர்ரன் ரூ5.5 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது

ஏலத்தில் எடுக்காத வீரர்கள்:

50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் புஜாராவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.  50 லட்சம் ரூபாய் அடிப்படை தொகையாக இருந்த இந்திய வீரர் ஹனுமன் விஹாரியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்திய வீரர் யூசுப் பதானை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து