முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை சட்ட விவகாரத்தில் வதந்தி பரப்பும் எதிர்க்கட்சியினர் பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள் - பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சில அரசியல் கட்சிகள் குடியுரிமை சட்டம் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும், என்னுடைய உருவ பொம்மையைக் கூட எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கிய பின் பிரதமர் மோடி பேசியதாவது,

மற்ற கட்சிகள் வெற்று வாக்குறுதிகளை அளித்துக் கொண்டு இருக்கும் போது கொடுத்த வாக்குறுதியை பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது.  குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றத்தின் கவுரவத்தை மதிக்க வேண்டும். மேலும் நாங்கள் மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர, குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல. சில அரசியல் கட்சிகள் குடியுரிமை சட்டம் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். அனைவரின் வளர்ச்சிக்காகவே குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்

எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். சில அரசியல் கட்சிகள் குடியுரிமை சட்டம் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். அனைவரின் வளர்ச்சிக்காகவே குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.  என்னுடைய உருவ பொம்மையை எரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ஹார்ஷவர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. ஆனால் குடியுரிமை சட்ட விவகாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் கூறி வருகிறார்கள். தர்மத்தின் பக்கம் மக்கள் நிற்பார்கள் என்றும் அ.தி.மு.க. தலைவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் சந்திக்க தமிழக அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து