தங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 உயர்வு - வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2019      வர்த்தகம்
gold-shop 2019 10 13

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருவதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தங்கத்தோடு வெள்ளி விலையும் நேற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று (டிசம்பர் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3665 ஆக இருந்தது.  நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்துள்ளது. அதே போல,  8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று  112 ரூபாய் உயர்ந்து 29,320-ரூபாய்க்கு விற்பனையானது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்திருந்தது. நேற்று அதன் விலை ரூ.3,847 ஆக இருந்தது.  8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,776 ரூபாயாக உயர்ந்திருந்தது.  தூய தங்கத்தின் விலையும் 112 ரூபாய் உயர்ந்திருந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.80லிருந்து ரூ.49.30 ஆக உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,300 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து