முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோவில் வாஜ்பாய்க்கு சிலை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : லக்னோவில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருவுருவச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் முதுமை, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், மக்கள் தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட அவரது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வாஜ்பாய் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியின் எம்.பி.யாக நீண்டகாலம் பதவி வகித்ததார். இதையடுத்து அவருக்கு அங்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த சிலையை பிரதமர் மோடி இன்று லக்னோவில் திறந்து வைக்கிறார். உத்தர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து