முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு அதிகாரிகளின் செயல்திறன் குறித்து தர நிர்ணயம் செய்யப்படும் - ராஜ்நாத் சிங் தகவல்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய அரசு அதிகாரிகளின் பணியின் செயல்திறன் குறித்து தர நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ராணுவ அமைச்சகத்தின் நிதிப்பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

எந்த ஒரு குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நிறுவனத்துக்கும் அல்லது நாட்டுக்கும் நிதி என்பது முதுகெலும்பாக உள்ளது. ஒவ்வொரு அமைச்சகமும் சிறப்பாக செயல்பட நிதி முக்கியம். அவற்றை நிர்வகிப்பதிலும் திறமையும் நேர்மையும் முக்கியமானது. இதற்காக பொது நிதி நிர்வாக அமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நிதி நிர்வாகம் சிறப்பாக செயல்படவும் நேர்மையுடன் வெளிப்படையாக இருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு அதிகாரிகளின் பணியின் செயல்திறன் குறித்து தர நிர்ணயம் செய்யப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குறைந்தபட்ச அரசு நடைமுறை, அதிகபட்ச நிர்வாகத் திறன் என்ற அரசின் நோக்கத்தின் கீழ் அதிகாரிகளின் செயல்திறன் பற்றி தர நிர்ணயம் செய்யப்படும். நிர்வாக நடைமுறைகள் விரைவில் செயல்பட வேண்டும் என்பதும் அதன் மூலம் மக்களுக்கு விரைவில் பலன் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து