முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார்? கோலி, டோனிக்கு கவுரவம்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் - யார்? என்ற கனவு பட்டியலில் கோலி, டோனிக்கு இடம் கிடைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி அசத்தியது யார்? என்பதை விஸ்டன் இதழ் பல்வேறு புள்ளி விவரங்களுடன் அலசி ஆராய்ந்து கனவு அணியாக வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் கனவு அணிக்கு இந்திய வீரர் விராட் கோலியை கேப்டனாக அமர்த்தி அழகு பார்த்துள்ளது. ஏராளமான சாதனைகளை படைத்து வரும் 31 வயதான விராட் கோலி 84 டெஸ்டுகளில் 27 சதம் உள்பட 7,202 ரன்களும், 242 ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்கள் உள்பட 11,609 ரன்களும் குவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டி கனவு அணியில் கோலியுடன் டோனி, ரோகித் சர்மா ஆகிய இந்தியர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டனின் டெஸ்ட் கனவு அணி வருமாறு:-

அலஸ்டயர் குக் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), சங்கக்கரா (இலங்கை), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), டேல் ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா), காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).

விஸ்டன் ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (இந்தியா), விராட் கோலி (இந்தியா), வார்னர் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), டோனி (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா).

இதே போல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் 2010-ல் இருந்து 2019-ம் ஆண்டு வரை சாதனை படைத்து ரசிகர்களை கவர்ந்த வீரர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கனவு அணியை பட்டியலிட்டுள்ளது. இந்த அணிகளிலும் கோலி, டோனிக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.

2011-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த டோனி, இந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவராக விளங்கினார். சேசிங்கின் போது 28 முறை அவுட் ஆகாமல் இருந்துள்ளார். அதில் 3 முறை மட்டுமே இந்தியா தோற்று இருக்கிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டோனி குறித்து கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் யாருக்கும் இவ்விரு அணிகளிலும் இடம் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு டெஸ்ட் அணி: அலஸ்டயர் குக் (இங்கிலாந்து), வார்னர் (ஆஸ்திரேலியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா, கேப்டன்), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா, விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).கனவு ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (இந்தியா), ஹசிம் அம்லா (தென்ஆப்பிரிக்கா), விராட் கோலி (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), டோனி (இந்தியா, கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), மலிங்கா (இலங்கை).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து