முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோவில் வாஜ்பாய் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 25 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளையொட்டி, லக்னோவில் 25 அடி உயர வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து  வைத்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ராய்ப்பூரின் பெயரை அடல் நகர்’  எனப் பெயர் மாற்றம் செய்து அம்மாநில அரசு அறிவித்தது. மத்தியப் பிரதேச அரசு, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில்  சேர்க்கப் போவதாகவும் தங்கள் மாநிலத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு வாஜ்பாய்க்கு தன்னுடைய மாநிலத்திலும் சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை  அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி  ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார். இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து, வாஜ்பாயின் பெயரில் அமையவுள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல்  நாட்டி பேசுகையில்,

எங்கள் நோக்கங்கள் மலிவு சுகாதாரத்தை விரிவுபடுத்துதல் என்றார். பிரிவு 370, ராமர் கோயில் பிரச்சினைகள் அமைதியாக தீர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்கள் இத்தகைய சவால்களுக்கு நம்பிக்கையுடன் தீர்வு கண்டுள்ளனர். உ.பி.யில் எதிர்ப்பு என்ற பெயரில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள், அவர்கள் செய்தது சரியா என்று ஆராய வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச கவர்னர் அனந்தி பென் பாட்டீல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து