முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் இதய வடிவில் தென்பட்ட சூரிய கிரகணம்!

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் சற்றே புதுமையாக தென்பட்ட இதய வடிவிலான சூரிய கிரகணத்தை பொதுமக்களும்,குழந்தைகளும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
சூரியன்,சந்திரன்,பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில்,ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.சூரியனை,சந்திரன் தனது நிழலால் பூமி மீது படாதவாறு மறைத்து விடுவதை சூரிய கிரகணம் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.வானத்தில் நிகழ்ந்திடும் இந்த அற்புதமான நிகழ்வு கடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.அதன்படி நேற்று காலை தமிழகத்தில் காலை 8.06மணிக்கு தொடங்கிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் பகல் 11.20 வரை சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு தெரிந்தது.இதனை தமிழகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் சூரிய கிரகணத்தின் அழகினை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் திருமங்கலம் நகரிலுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் துளிர் அறிவியல் மையத்தின் சார்பில் நேற்று காலை முதல் சூரிய கிரகணத்தினை பார்ப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.அப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருக்கும் பாதுகாப்பு கண்ணாடிகள் கொடுக்கப்பட்டு சூரிய கிரகணத்தை நேரில் கண்டுகளித்திட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.இதனிடையே நேற்று காலை திருமங்கலம் பகுதி வானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் திடீரென்று இதய வடிவில் ஒளிக்கற்றைகளுடன் முற்றிலும் வித்தியாசமான முறையில் தென்பட்டது.
இதனை சிறிதும் எதிர்பார்த்திடாத சிறுவர்களும் பெரியவர்களும் இதய வடிவில் தென்பட்ட சூரிய கிரகணத்தை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.அப்போது உலகத்துக் கெல்லாம் நெருப்பு வளைய சூரிய கிரகணம், ஆனால் எங்களுக்கு மட்டும் அன்பே வடிவான காதல் கிரகணம் என திருமங்கலம் பகுதி மக்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.எனினும் இதய வடிவிலான சூரிய கிரகணம் திருமங்கலம் பகுதியில் மட்டும் தெரிந்ததற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து