முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம் ஒழுங்கு பற்றி பேசக் கூடாது - ஸ்டாலினுக்கு ஜெயகுமார் அட்வைஸ்

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இனி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் பேசக் கூடாது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மத்திய அரசு சார்பில் 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நம் தமிழகம்தான் முதலிடம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்த ஆண்டின் பரிசாக நமக்குக் கிடைத்துள்ளது. 2021 தேர்தலைச் சந்திக்கும் போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, இதே நிலைதான் தொடரும். சட்டம் ஒழுங்கு பற்றி இனி ஸ்டாலின் பேசக்கூடாது. பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வேளாண் துறையில் தற்போது 9-வதுஇடத்தில் இருந்தாலும், விரைவில் முதலிடம் பிடிப்போம். உள்ளாட்சி, காவல்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது தமிழக அரசு. எனவே, இனி சட்டம் ஒழுங்கு பற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசக் கூடாது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து