முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் பழங்குடியினர் விழா: நடனமாடி பார்வையாளர்களை அசத்திய ராகுல் காந்தி

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் மூன்று நாள் தேசிய பழங்குடி நடன விழாவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். விழாவின் போது பழங்குடியின சமூக மக்களுடன் இணைந்து அவர் நடனமாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். 

இந்த விழாவில், வெள்ளை உடையில் உடையணிந்து, செயற்கை பைசன் கொம்புகளுடன் சிவப்பு தலைக்கவசம், காந்தி ஒரு டிரம்ஸை அடிக்கும் போது, பழங்குடியினருடன் வட்டவடிவமாக சுற்றி ஆடிவந்தார். இது பஸ்தார் பகுதியில் உள்ள அபுஜமாத்தின் தண்டமி மாடியா பழங்குடியினரின் மிகவும் பிரபலமான நடனம் ஆகும். இது கவுர் நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடனம் ஆண் மற்றும் பெண் நடனக் குழுவினரால் நிகழ்த்தப்படுகிறது. ஆண் நடனக் கலைஞர்கள் பைசன் ஹார்ன் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டு நடனமாடும்போது டிரம் வாசிப்பபது வழக்கம். பழங்குடியினர் திருவிழாவை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ராகுல் டுவீட் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து