முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் ரேஷன் நிறுத்தப்படும்: கேரள அரசுக்கு பா.ஜ.க. எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்றுள்ள நிலையில், அதற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் பேசியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது,

மத்திய கிழக்கு நாடுகளில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்  குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியிருக்கும். கேரளத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை அரசு அமல்படுத்தாவிட்டால், அம்மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும். நாட்டில் இயற்றப்படும் அனைத்துச் சட்டங்களுக்கும் அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது அவசியம். எந்தவொரு மாநிலமும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. மாநிலத்தில் சில விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்பட்சத்தில் அதற்கு முதல்வர் பினராய் விஜயன் தான் பொறுப்பேற்க வேண்டும். பினராய் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகிய இருவரையும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து