முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல்: 27 மாவட்டங்களில் 45,336 பதவிகளுக்கு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நேற்று நடந்த முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.  260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு நேற்று   விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக நடைபெறுகிறது.  முதல்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2-வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின் படி 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடந்தது. ஓட்டுப்போடுவதற்காக பலர் காலையிலேயே ஆர்வமுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்திருந்தனர். வயதானவர்கள் பலர் ஊன்றுகோல் உதவியுடன் மெதுவாக வாக்குச்சாவடிக்கு வந்து, தள்ளாத வயதிலும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர். குறிப்பாக வெளியூர்களில் இருப்பவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் ஓட்டுச்சீட்டு அடிக்கப்பட்டு இருந்தது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டும் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சோதனை முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் வரும் காலங்களில் உள்ளாட்சி தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.   260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு நேற்று  வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபட்டன. ஒரு வாக்குச்சாவடிக்கு 7 முதல் 8 அலுவலர்கள் வீதம் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 158 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து