முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படாது -மம்தா

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

 கொல்கத்தா : நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படாது என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் தினந்தோறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நைஹாட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மத்திய அரசு தடுப்பு முகாம்களை அமைப்பதாக கூறுகிறார்கள். நான் என் உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். நான் இறந்தாலும் தடுப்பு முகாம்களை அமைக்க மத்திய அரசை அனுமதிக்க மாட்டேன். யாரும் நாட்டைவிட்டோ அல்லது மாநிலத்தை விட்டோ வெளியேற வேண்டியதில்லை. மேற்கு வங்காளத்தில் எந்த தடுப்புகாவல் முகாமும் இருக்காது என அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து