முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஆய்வில் தமிழகம் முதலிடம்: முதல்வர் எடப்பாடிக்கு ராமதாஸ் பாராட்டு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய அரசு நிறுவனம் நடத்திய ஆய்வில் நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் இந்தியாவின் 18 பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகாக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய நல்லாட்சி நாளையொட்டி நல்லாட்சி குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களை தரவரிசைப் படுத்தும் வழக்கத்தை மத்திய அரசு நடப்பாண்டில் தொடங்கியுள்ளது. வேளாண்மை, தொழில் மற்றும் வணிகம், மனிதவளம், பொது சுகாதாரம், பொது உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் மேம்பாடு, நீதி மற்றும் பொதுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குடிமக்கள் சார்ந்த நிர்வாகம் ஆகிய 10 துறைகளில் 18 பெரிய மாநிலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவை சார்ந்த 50 காரணிகளின் அடிப்படையில் நல்லாட்சிக் குறியீடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 10 துறைகளிலும் சேர்த்து பத்துக்கு 5.62 மதிப்பெண் பெற்று நல்லாட்சிக்கான குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது.

ஏற்கனவே, உள்ளாட்சித் துறையில் சிறந்த செயல்பாடுகளுக்காக நடப்பாண்டில் 13 விருதுகள் உள்ளிட்ட 99 விருதுகளை தமிழக அரசு இதுவரை வென்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக கிருஷி கர்மான் விருதுகளையும் தமிழக அரசு தொடர்ந்து வென்றெடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசின் சாதனைகளும், வெற்றிகளும் தொடர்வதற்கு வாழ்த்துகிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து