முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்றைய இளைஞர்கள் அராஜகப் போக்கை விரும்புவதில்லை - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய இளைஞர்கள் அராஜகப் போக்கை விரும்புவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவை நவீன மயமாக்குவதில் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

அராஜகப் போக்கை இளைஞர்கள் வெறுப்பது தெளிவாகத் தெரிகிறது. குடும்ப அரசியல், சாதி அரசியல், வேண்டியவர் - வேண்டாதவர் பாகுபாடு போன்றவற்றை இளைஞர்கள் விரும்புவதில்லை.

இன்றைய இளைஞர்கள் ஒழுங்கான அமைப்பு முறையை விரும்புகின்றனர். இளமைக்கால பயன்பாட்டை நம்பியே ஒருவரின் எதிர்காலம், வாழ்க்கை ஆகியவை உள்ளது.
நாட்டின் முன்னேற்றம் வேகமெடுக்க 21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமாக பங்களிப்பார்கள்.

கல்வி நிலையங்களில் படிப்பை நிறைவு செய்த பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது சுகமான அனுபவம். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிலையங்களில் நூலகம் போன்றவற்றை அமைத்துத் தரலாம். உள்ளூர் பொருட்களை வாங்குவோம், உள்ளூர் பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம் என்று பிரதமர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து