முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் மீது ராகுலுக்கு அன்பிருந்தால் இத்தாலிக்கு அழைத்து செல்லட்டும்: மத்திய அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

ராஞ்சி : இந்தியாவில் ஊடுருவியவர்கள் மீது முன்னாள் காங்., தலைவர் ராகுலுக்கு அன்பு இருந்தால், இத்தாலிக்கு அழைத்து செல்லட்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னாள் காங்., தலைவர் காங்., ராகுல் சமீபத்திய பொதுக்கூட்டங்களில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுமாறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், அவற்றில், பாஜ.க, அரசு குறிப்பிட் சமூகத்தினருக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய விலங்குகள் பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், ராஞ்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ்  கட்சி இரட்டைத்தர கொள்கையிலிருந்து விலக வேண்டும். பொய்களைப் பேசுவதன் மூலம் நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. ராகுலுக்கு, இந்தியாவில் ஊடுருவியவர்கள் (குடியேறியவர்கள்) மீது அன்பு இருந்தால், அவர்களை இத்தாலிக்கு அழைத்துச் செல்லட்டும். குழப்பத்தை பரப்பி, அச்சத்தின் சூழலை உருவாக்கும் காங்கிரசின் பாவங்களை பாஜ.க, தூய்மைப்படுத்துகிறது. இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து