முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று பத்து ரூபாயில் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலா துறை ஏற்பாடு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

புத்தாண்டு அன்று பத்து ரூபாயில் சென்னையின் 9 முக்கிய இடங்களை சுற்றி பார்க்க சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு :-

சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) சுற்றுலா வளர்ச்சிக்கழகம் புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் புத்தாண்டு அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது. சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம். காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செல்லதக்கதாகும்.

சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து