முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 158 ஒன்றியங்களில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான 2 - ம் கட்ட தேர்தலில் 158 ஒன்றியங்களில் 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் நான்கு வண்ண சீட்டுகளில் தங்களது வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று  2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள 158 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

நான்கு ஓட்டு போட்ட மக்கள்

 நேற்றைய தேர்தலில் 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 38 ஆயிரத்து 916 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் ஓட்டுச்சீட்டு அடிக்கப்பட்டு இருந்தது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டும் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆர்வத்துடன் வாக்களித்தனர்

இந்த சீட்டுக்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த சின்னங்களில் வாக்குகளை செலுத்தினர். பின்னர் 4 வண்ண சீட்டுகளையும் ஓட்டுப்பெட்டியில் போட்டனர். நேற்றைய தேர்தலில் பொதுமக்கள் சிரமம் இன்றி ஓட்டுப்போடுவதற்காக அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 158 ஒன்றியங்களிலும், 25,008 வாக்குச்சாவடிகளில் நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

2 - ம் தேதி வாக்கு எண்ணிக்கை

இதையடுத்து, அனைத்து ஓட்டுப்பெட்டிகளும் 315 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஓட்டுக்கள் அனைத்தும் ஜனவரி 2-ந்தேதி (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. அன்று மாலையிலேயே முடிவுகளை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து