முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புடின்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் புடின் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். 1999-ம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புடின் பணியாற்றினார். 1999 - ம் ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சின், பொறுப்பு பிரதமராக புடினை நியமனம் செய்தார்.

அதன்பின் அதிபர் பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999 - ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ராஜினாமா செய்தார். அப்போது பொறுப்பு அதிபராக விளாடிமிர் புடினை நியமித்தார். அப்போது கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளி தாக்குதலை புடின் நடத்தினார். இதனால் அவர் ரஷ்ய மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். அன்றுமுதல் புடின் ரஷ்யாவில் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் புடின் அபாரவெற்றி பெற்றார். அவர் 202 2  -ம் ஆண்டு வரை அதிபராக இருப்பார். ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புடின் நேற்று தனது அரசியல் பயணத்தின் 21-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் 20 ஆண்டுகளாக அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.புடின் மீது பல்வேறு சர்ச்சைகள் கூறப்பட்டாலும் அவர் ரஷ்யாவில் சக்தி வாய்ந்த தலைவராகவே இருந்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து