முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய கால அவகாசம் 6 மாதத்திற்கு நீட்டிப்பு : தமிழக அரசு

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரன்முறை செய்ய நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் 113 சி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி 2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது கடந்த 2017 -ம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. இதற்கான கால அவகாசம் தொடர்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 6-வது முறையாக கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆறு மாதத்தில் விதி மீறிய கட்டிடங்களை வரன்முறை படுத்த விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து