முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019-ல் 50 சதவீதம் குறைந்துள்ளன : சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் இதனை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என சென்னை மாநகர காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டதால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு குற்றங்கள் 2019-ல் 50 சதவீதம் குறைந்துள்ளன என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விபத்துக்களில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே சிறந்த நகரமாக சென்னை விளங்குகிறது எனவும் கூறியுள்ளார். கோலம் போட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை; ஏற்கனவே போட்ட கோலத்தில் ‘NO CAA' என எழுதியுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் எனக் கேட்ட போது முழக்கம் எழுப்பியதால் கைது செய்யப்பட்டனர் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து