முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட பஞ்சாயத்தை மீண்டும் கைப்பற்றிய அ.தி.மு.க. கூட்டணி

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

 நாகர்கோவில் : குமரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. அ.தி.மு.க. 4 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா 2 இடங்களையும் பிடித்துள்ளது.  

குமரி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 11 வார்டுகள் உள்ளன.

அகஸ்தீஸ்வரம், திருவட்டார், தோவாளை, கிள்ளியூர், தக்கலை, குருந்தன்கோடு, மேல்புறம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து தலா ஒரு கவுன்சிலரும், ராஜாக்கமங்கலம், முன்சிறை ஒன்றியங்களில் இருந்து தலா 2 பேரும் என மொத்தம் 11 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவற்றில் 6 இடங்களை பிடிக்கும் கட்சி, தலைவர் பதவியை கைப்பற்றும். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 53 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 நள்ளிரவு வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. அ.தி.மு.க. 4 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா 2 இடங்களையும் பிடித்துள்ளது. மீதம் உள்ள 5 வார்டுகளையும் காங்கிரஸ் கட்சி பிடித்தது.

11 வார்டுகளிலும் வெற்றி பெற்ற வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

 1-வது வார்டு- அம்பிலி (காங்கிரஸ்)
2-வது வார்டு- செலினா மேரி (காங்கிரஸ்)
3-வது வார்டு- பரமேஸ்வரன் (அ.தி.மு.க.),
4-வது வார்டு- லூயிஸ் (காங்கிரஸ்)
5-வது வார்டு- ராஜேஷ்பாபு (பாரதிய ஜனதா)
6-வது வார்டு- ஜோபி (காங்கிரஸ்)
7-வது வார்டு- சர்மிளா ஏஞ்சல் (காங்கிரஸ்)
8-வது வார்டு மெர்லின்தாஸ் (அ.தி.மு.க.)
9-வது வார்டு - சிவகுமார் (பாரதிய ஜனதா).
10-வது வார்டு ஜான்சிலின் விஜிலா (அ.தி.மு.க.)
11-வது வார்டு நீலம்பெருமாள் (அ.தி.மு.க.)

கடந்த முறை குமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சாரதாமணி இருந்தார். இந்த முறையும் அ.தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த கட்சியைச் சேர்ந்தவரே தலைவராக தேர்வு செய்யப்படுவார். இதன் மூலம் குமரி மாவட்ட பஞ்சாயத்தை அ.தி.மு.க. மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து