முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகை: கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மேலாண்மை இயக்குனர் தகவல்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

கோவை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மண்டலங்களின் சார்பாக கோவை காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் மார்க்கமாக 127 வழித்தடப் பேருந்துகள் தினசரி 184 நடைகளும், சிங்கநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி மார்க்கமாக 55 வழித்தடப் பேருந்துகள் தினசரி 60 நடைகளும் என மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இயக்கப்படுவதால், இடப்பற்றாக்குறையின் காரணமாக டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் காமராஜர் சாலையில் பேருந்துகளை நிறுத்த நேரிடுகிறது.

இந்நிலையில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சேலம் மார்க்கமாக 230 பேருந்துகளும், திருச்சி மார்க்கமாக 200 பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு 11.01.2020 முதல் 14.01.2020 வரை கொடீசியா திடலிலிருந்து தற்காலிகமாக சேலம், திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் வழித்தடப் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் நலனிற்காக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் - கொடீசியா திடல், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் -கொடீசியா திடல் என போதுமான அளவில் இணைப்புப் பேருந்துகள் இயக்கிடவும், கொடீசியா திடலில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து