முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்: தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்குகிறது - கவர்னர் பன்வாரிலால் உரை நிகழ்த்துகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.6) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

இது தொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் கடந்த 24-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கவர்னர் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவின் கீழ் சட்டசபை கூட்டத்தை ஜனவரி 6-ம் தேதி கூட்டியுள்ளார். சட்டசபையில் காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி 15-வது சட்டசபையின் 8 - வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த உரையில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் இடம்பெறும். அதன்பின், கவர்னரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவர் தனபால் தமிழில் வழங்குவார். கவர்னர் உரையாற்றி முடிந்ததும் சட்டசபை கூட்டம் விவாதமின்றி முடிந்து விடும். இதையடுத்து அன்றைய தினம் பிற்பகலில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம்  கூடி சட்டசபையை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது பற்றி முடிவு செய்யப்படும். அனேகமாக வரும் 10-ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். முன்னதாக சட்டசபையில் உரையாற்ற வரும் கவர்னரை சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் வரவேற்று அழைத்து வருவார்கள்.

இதற்கிடையில், இந்தக் கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒருநபர் தீர்மானத்தை ஸ்டாலின்பேரவை தலைவருக்கு அளித்துள்ளார். அதே நேரம், பேரவை கூடும் நாளுக்கு 15 நாட்கள் முன் தீர்மானம் குறித்த கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்க வேண்டும். பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு குறைந்த நாட்களுக்கு முன்னதாக கடிதம் கொடுத்துள்ளதால், இந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது கூட்டத்தொடரின் போதுதான்தெரியும்.

இந்நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ்பவனில் நேற்று முன்தினம் மாலை சந்தித்த பேரவைத் தலைவர் தனபால், பேரவையில் (இன்று) உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து