முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல்கூடம் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடிஅறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேனி மாவட்டத்தில் சமையல் கூடம் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், பொன்னன்படுகை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெருமழையின் காரணமாக பயன்பாட்டில் இல்லாத சமையல் கூடம் இடிந்து விழுந்ததில், 8-ம் வகுப்பு படித்து வந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் மாணவன் செல்வன் செல்வக்குமார் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அச்சிறுவனுடைய வலது கை அகற்றப்பட்டது என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும்  செல்வன் செல்வக்குமாருடைய மருத்துவ செலவு முழுவதையும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு மூலம் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். மேலும், சிறுவன் செல்வக்குமாரின் குடும்பத்திற்கு ஏற்கனவே இரண்டு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. சிறுவனின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய், சிறுவன் செல்வக்குமாரின் குடும்பத்திற்கு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து