முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும்:கவர்னர்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

தமிழக அரசு காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் என்று கவர்னர் பன்வாரிலால் கூறினார்.

சட்டசபையில் கவர்னர் தனது உரையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் அருகி வரும் நீர் வளங்களை, மக்கள் பெருமளவில் நன்மையடையும் வகையில், பயன்படுத்திட வகைசெய்வது நமது புனிதமான கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ‘தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்’ என்ற ஒரு இயக்கத்தை மக்கள் இயக்கமாகத் தொடங்கியுள்ளார். இதனால், ஏரிகள், நீர்ப்பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் குளங்களை மக்களின் பங்களிப்போடு புனரமைப்பதற்கு செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டம் மேலும் உத்வேகம் அடைந்துள்ளது. 2016–17ஆம் ஆண்டு முதல், இந்தத் திட்டத்தின் கீழ், 4,871 பணிகள் 931.76 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தியதன் காரணமாக, இந்த ஆண்டு பெய்த மழைப்பொழிவை, நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்காக சேமித்து வைக்க முடிந்தது. முதலமைச்சர் காவேரி ஆற்றின் பெருமைமிக்க தூய்மையை மீட்டெடுக்கும் பொருட்டு ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருப்பதால், அதன் நீர்த் தேவைகளை நிறைவு செய்வதற்கு, வடிநிலங்களுக்கு இடையே நதிநீரை மடை மாற்றம் செய்வது அவசியமாகிறது. இதன் முதல் கட்டமாக, கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி தண்ணீரையாவது காவேரி வடிநிலத்திற்கு வழங்க வேண்டுமென மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு தன் பங்காக, தமிழ்நாட்டிற்குள் பாய்கின்ற நதிகளை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் விதமாக, காவேரி – குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும்.

இதில் முதல் கட்டமாக, முதலமைச்சர் முன்னரே அறிவித்தவாறு, காவேரி–தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளுக்கான நிலைக்கத்தக்க வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, முன்னோடி தொழில்நுட்ப விரிவாக்கம், சந்தை ஒருங்கிணைப்பு, மதிப்புக் கூட்டு உற்பத்தி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஊக்குவிப்பு மூலமாக இந்த அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த ஆண்டு நிலவிய சாதகமான பருவமழை மற்றும் சிறந்த நீர் மேலாண்மையின் மூலம் கடைமடைப் பகுதி வரை பாசன நீர் சென்றடைந்ததால், பயிரிடும் பரப்பளவு 7 லட்சம் ஏக்கர் வரை அதிகரித்துள்ளது. உணவு தானிய உற்பத்தி 115 இலட்சம் மெட்ரிக் டன் அளவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக 7,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தமிழ்நாட்டு விவசாயிகள் பெற்றுள்ளனர்.

வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு விற்பதற்கு ஏதுவாக, ‘தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்–2019’ இயற்றப்பட்டது.

சர்க்கரைத் தொழிற்சாலைகள் கடுமையான இடர்பாடுகளை சந்தித்து வருவதால், கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனைச் சரிசெய்ய, சர்க்கரை ஆலைகளின் நிதி மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் எனக் கருதி, தமிழ்நாட்டின் சர்க்கரை தொழிற்சாலைகளின் மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய அரசு சிறப்பு நிதிச் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்.

இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து