முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி - 20 மழையால் கைவிடப்பட்டது

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

கவுகாத்தி : இந்தியா - இலங்கை இடையே ஆன முதல் டி - 20 போட்டி மழையால் தடைபட்டு, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி - 20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் 7 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். டாஸ் போட்ட அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது.

அதனால், போட்டி துவங்குவதற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இடையே மழை விட்ட நிலையில் பிச்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதற்கு தொடர்ந்து தாமதம் ஆனது. பின் ஆடுகளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்து அதை காய வைக்கும் முயற்சிகள் அனைத்து தரப்பினரும் மேற்கொண்டனர்.ஒரு கட்டத்தில் வாக்குவம் கிளீனர் வைத்தும் காய வைக்க முடியாமல், அயன் ஃபாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை மூலம் ஆடுகளத்தை காய வைக்க முயற்சி நடைபெற்றது. இதன் மூலமும் ஆடுகளத்தை குறித்த நேரத்திற்குள் தயார்செய்ய முடியவில்லை. இதையடுத்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் , அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து