முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் போட்டியை காண வரும் குடும்பத்தினரை தேவையில்லாமல் இழுக்காதீர்கள் - ரோகித் சர்மா வேதனை

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : போட்டியை காண வரும் குடும்ப நபர்களால் தான் எங்களது ஆட்டத்தில் மந்த நிலை ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரோகிர் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்திய அணி வீரர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்ததால் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் எழும்பியது. இதற்கு ரோகித் சர்மா பதில் அளிக்கையில் எங்களுடைய (வீரர்கள்) குடும்பங்கள் எங்களின் ஆதரவிற்காக வந்தார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக உணர்ந்தோம். இதுகுறித்து எழுதும்போது என்னுடைய நண்பர்கள் என்னிடம் கூறுவார்கள். நான் நம்புகிறேனோ? இல்லையோ?. இதை கேட்டு சிரித்துக் கொள்வேன். ஆனால், மேலும் மேலும் குடும்பத்தை இழுக்கும்போது அதை ஏற்க இயலாது. என்னைப் பற்றி நீங்கள் பேசலாம். ஆனால் என்னுடைய குடும்பம் உண்மையிலேயே அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். விராட் கோலிக்கு கூட வாழ்க்கையில் குடும்பம் முக்கியமான அம்சம் என்ற உணர்வில்தான் இருப்பார் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து